பதிவு செய்த நாள்
08
ஆக
2016
12:08
சென்னை: சென்னை, பெரம்பூர் லட்சுமி அம்மன் கோவில் தீ மிதி திருவிழாவில், 1,200 பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.சென்னை, பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலை யில், லட்சுமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், ஆண்டுதோறும் ஆடி மாதம் 3, 4 மற்றும் 5வது ஞாயிற்றுக்கிழமையில் தீமிதி திருவிழா, நடக்கிறது. இந்த ஆண்டில் ஆடி மாதம், 4வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று இரவு 8:00 மணிக்கு, தீமிதி திருவிழா துவங்கியது. இந்த திருவிழாவில், பெரம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த, 1,200 பக்தர்கள் தீமிதித்து, அம்மன் அருள் பெற்றனர். திருவிழாவில், தீ மிதித்த பக்தர்களின் பாதுகாப்பிற்காக, தலா ஒரு லட்சம் ரூபாய் அளவிற்கு இழப்பீடு தருவதற்கு கோவில் நிர்வாகம் காப்பீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.