பதிவு செய்த நாள்
10
ஆக
2016
12:08
நாமக்கல்: சித்தி விநாயகர் கோவிலில், நாளை (ஆக., 11) குருப்பெயர்ச்சி விழா நடக்கிறது. கடந்த, 2ம் தேதி, குருபகவான், சிம்ம ராசியில் இருந்து, கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். தொடர்ந்து, நாமக்கல் - துறையூர் சாலையில் உள்ள, சித்தி விநாயகர் கோவிலில், நாளை (ஆக., 11) குருப்பெயர்ச்சி சிறப்பு பூஜை நடக்கிறது. காலை, 9 மணிக்கு, கணபதி பூஜை, நவக்கிரக தேவதைகள் ஆவாஹனம், குருபகவான் பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து, மகா சண்டிகா தேவி மூலமந்திர பிரயோக பூஜையும் நடக்கிறது. மாலை, 6 மணிக்கு தீபாராதனை, 6.30 மணிக்கு, குருப்பெயர்ச்சியாலும், கிரக நிலைப்பாட்டாலும், 12 ராசிக்காரர்களுக்கும் ஏற்படும் பலன்கள் குறித்து, சன்னிதானம் சங்கரய்யர் சுவாமிகள் விளக்குகிறார். மேலும் விவரங்களுக்கு, 04286 - 287777 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.