ஊட்டி: ஊட்டி புனித மோட்ச ராக்கினி மாதா தேவாலயத்தில், நோயாளிகளுக்கான சிறப்பு திருப்பலி நடந்தது. ஊட்டி புனித மோட்ச ராக்கினி தேவாலயத்தின், 178வது ஆண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. அதையொட்டி, தினமும் மாலை சிறப்பு திருப்பலி, ஜெபமலை நவநாள் மற்றும் மறையுரை நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, நோயாளிகளுக்கான சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது. பங்கில் உள்ள, 38 நோயாளிகள் தேவாலயத்துக்கு அழைத்து வரப்பட்டு, நற்கருணை ஆசீர்வாதம் வழங்கப்பட்டது. திருப்பலியை, அருட்திரு அருண் ஞானபிரகாசம் தலைமையேற்று நடத்தினார். உடன், பங்குத் தந்தை வின்சென்ட், உதவி பங்குத் தந்தை எட்வின் சார்லஸ் பங்கேற்றனர். திருப்பலிக்கு பின், சிறப்பு நற்கருணை பவனி, தேவாலயத்தில் இருந்து நசரத் பள்ளிக்கு சென்று, அங்கு சிறப்பு ஆசிர்வாதம் வழங்கப்பட்டது; ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, மரியன்னை இளைஞர் குழு செய்திருந்தனர்.