பதிவு செய்த நாள்
10
ஆக
2016
12:08
குன்னுார்: குன்னுார் ராஜாஜிநகர், உழவர் சந்தை அருகே எல்.ஐ.சி., காலனி பகுதியில் ஜெய்பவானி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு, 21வது ஆடித்திருவிழா கடந்த, 5ம் தேதி மகாகணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, மாவட்ட சவுந்தர்ய லகரி பூஜா மண்டலி சார்பில்,வஸந்த்ர லகரி பாராயண பூஜை, மற்றும் ஆன்மிக சொற்பொழிவு ஆகியவை நடந்தன. பின், மகா பிரத்தியங்கிரா ஹோமம், பிரசாத வினியோகம், பக்தி இசை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் திரு கல்யாண வைபவம், அம்மன் திருவீதி உலா ஆகியவை நடந்தன.