வடமதுரை,: பாடியூர் கிராமம் எட்டிகுளத்துபட்டியில் சித்தன்னன், கசுவம்மாள், மதுரை வீரன் கோயில் திருவிழா மூன்று நாட்கள் நடந்தது. கடந்த ஆக.7 இரவு கோயில் சன்னதியில் இருந்து சுவாமி புறப்பட்டு வாணவேடிக்கையுடன் முதலியார் குளம் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. அங்கு சேர்வையாட்டம், சக்தி தேங்காய் தலையில் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் கங்கையில் இருந்து சுவாமி ஊர்வலமாக கோயிலுக்கு வந்தார். கோயில் பங்காளிகள் தலையில் தேங்காய் உடைத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன் வழிபாடுகளை செய்தனர். கசுவம்மாள், மதுரை வீரன் சன்னதிகளில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடந்தது. விழா ஏற்பாட்டினை எட்டி குளத்துபட்டி, இ.புதுார், எம்.புதுார் கெங்ககுல பங்காளிகள் செய்திருந்தனர்.