பதிவு செய்த நாள்
13
ஆக
2016
01:08
ஆர்.கே.பேட்டை: ஆடி கடைசி வெள்ளிக்கிழமையான (ஆக.,12), அம்மன் கோவில்களில் பால், மஞ்சள் நீர் அபிஷேகம் மற்றும் குத்துவிளக்கு பூஜை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்.கே.பேட்டை அடுத்த, அம்மையார்குப்பம் காமாட்சியம்மன் கோவிலில், (ஆக.,12), காலை, 1,008 பால்குடம் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை, 6:00 மணியளவில், கோவில் வளாகத்தில், 1,008 குத்துவிளக்கு பூஜை நடத்தப்பட்டது. இதே போல், அம்மையார்குப்பம் சக்தியம்மன் கோவிலில் காலை, 1,008 குடம் மஞ்சள்நீர்
ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு, அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மாலையில், 1,008 குத்துவிளக்கு பூஜை நடந்தது. நாகபூண்டி உலகாத்தம்மன் கோவில் ஆடி பெருவிழா, (ஆக.,12), காலை பால் குடங்கள் ஊர்வலத்துடன் துவங்கியது. காலை, 11:30 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு, அம்மன், ராஜேஸ்வரி அலங்காரத்தில் வீதியுலா எழுந்தருளினார்.