Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அழகு நாச்சியம்மன் கோவிலில் கஞ்சி ... விழுப்புரத்தில் ஆதிபராசக்தி இயக்கம் கஞ்சிக்கலய ஊர்வலம் விழுப்புரத்தில் ஆதிபராசக்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெள்ளத்து மகமாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்
எழுத்தின் அளவு:
வெள்ளத்து மகமாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

பதிவு செய்த நாள்

16 ஆக
2016
11:08

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை வெள்ளத்து மகமாரியம்மன் கோவிலில் 108 பால்குட ஊர்வலம் நடந்தது. கோவிலில், கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் ஆடி மாத திருவிழா துவங்கியது. தினமும் காலை, மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.  கடந்த 12ம் தேதி செடல் உற்சவம், திருத்தேர் புறப்பாடும், 13ம் தேதி காலை 7:30 மணிக்கு காசிவிஸ்வநாதர் கோவிலில் இருந்து பெண்கள் 108 பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்து 8:40 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து 11:30 மணிக்கு சாகை வார்த்தல் நடந்தது. இரவு அம்மன் வீதியுலாவும், பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடந்தது.

பெண்ணாடம்: இறையூர் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, பால்குட ஊர்வலம் நடந்தது. இதையொட்டி, 14ம் தேதி காலை 8:00 மணியளவில் அம்மனுக்கு அபிஷேகம், 8:30 மணியளவில் தீபாராதனை நடந்தது. 9:00 மணியளவில் ஏராளமான பக்தர்கள் செடல் அணிந்து, பால் குடம் சுமந்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று பகல் 11:30 மணியளவில் அம்மனுக்கு பாலபிஷேகம் செய்து, வழிபட்டனர். சேத்தியாத்தோப்பு: ஆனைவாரி கிராமத்தில் சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் 20ஆம்  ஆண்டு பால்குட ஊர்வலம் விமர்சியாக நடந்தது. அதிகாலை நல்ல தண்ணீர் குளத்தில் சக்திகரகம் ஜோடிக்கப்பட்டு, காவடி, பெண்கள் 108 பால்குடத்துடன் கிராமத்தில் உள்ள வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். பின்னர் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குன்றத்துார்: குன்றத்துார் முருகன் கோவில் திருத்தேர் விழா, இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  கும்பகோணத்தில் தயாரிக்கப்பட்ட 51 அடி உயர, 65 டன் எடையிலான ஐம்பொன் ஆதிபராசக்தி ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவில் மாசி பிரம்மோத்சவ தேரோட்டம் இன்று கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar