பதிவு செய்த நாள்
24
செப்
2011
11:09
விழுப்புரம்:விழுப்புரம் அடுத்த பெரும்பாக்கத்தில் உள்ள பெருந்தேவி சமேத வேங்டவரத ராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மகோற்சவ விழா இன்று துவங்குகிறது. விழாவையொட்டி இன்று பெருந்தேவி சமேத வேங்டவரத ராஜ பெருமாள் கோவிலில் உள்ள ஆதிவண் சடகோப யதீந்திர மகா தேசிகர் வாஷிகர் மகோற்சவம் துவங்கி 2ம் தேதி திருக்கேட்டை சாற்று முறையுடன் முடிகிறது.இதில் 2ம் தேதி காலை 6.30 மணிக்கு விஸ்வரூபம், 8 மணிக்கு மங்களா சாசனம், காலை 10.30 மணிக்கு பெருமாள், தாயார், லட்சுமி நரசிம்மர், சக்கரத்தாழ்வார், ஆண் டாள், ஆழ்வார்கள், சுவாமி தேசிகனுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு மங்கள இசை, விஷேச சாற்று முறை, வீதியுலா நடக்கிறது. மேலும் 28ம் தேதி முதல் 6ம் தேதி வரை தாயார் பெருமாள் நவராத்திரி உற்சவம் நடக்கிறது. இதில் 6ம் தேதி விஜயதசமியன்று காலை 9 மணிக்கு மங்களா சாசனம், சாற்றுமுறையும், மாலை 5 மணிக்கு வேங்கட வரத ராஜ பெருமாள் வீதியுலா நடக்கிறது.நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக தர்மகர்த்தா முரளி, தர்மகர்த்தாக்கள் கண்ணன், விஜயராகவன் செய்து வருகின்றனர்.