Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெள்ளி விநாயகர் சிலைகளுக்கு வட ... மேலுார் நாகம்மாளுக்கு பாலாபிஷேகம் மேலுார் நாகம்மாளுக்கு பாலாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பத்மநாப சுவாமி கோவில் ரூ.186 கோடி தங்க குடத்தில் கை வைத்தது யார்?
எழுத்தின் அளவு:
பத்மநாப சுவாமி கோவில் ரூ.186 கோடி தங்க குடத்தில் கை வைத்தது யார்?

பதிவு செய்த நாள்

17 ஆக
2016
11:08

புதுதில்லி: திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில், 186 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க குடங்கள் மாயமாகியுள்ளதாக, சுப்ரீம் கோர்ட்டில், தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்க குடங்கள் மாயமானது எப்படி என்ற விவரத்தை கண்டுபிடித்து, அதை பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும் என,பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர். கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடதுசாரி கூட்டணி ஆட்சி நடக்கிறது; இங்கு, திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் இருக்கும் ரகசிய அறைகளில் பல கோடி ரூபாய் மதிப்புடைய தங்க நகைகள், ஆபரணங் கள் கண்டுபிடிக்கப் பட்டன. இதுதொடர்பான விசாரணை, சுப்ரீம் கோர்ட் டின் கண்காணிப்பில் நடக்கிறது.

நகைகள் திருடு போனதாக எழுந்த புகாரையடுத்து, தணிக்கை செய்து, அறிக்கை தாக்கல் செய்ய, முன்னாள் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி வினேத்ராய் தலைமையிலான கமிட்டியை, சுப்ரீம் கோர்ட், நியமித்தது.இக்கமிட்டி, தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கோவிலில் இருந்த, 186 கோடி ரூபாய் மதிப்புள்ள, 769 தங்க குடங்களை காணவில்லை. நகைளை உருக்கி, சுத்திகரிக்கும் போது, 2.5 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒப்பந்ததாரரிடம் இருந்து எஞ்சிய தங்கம்மீட்கப் படா ததால், 59 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. கோவிலில், பி அறை, 1990 முதல், 2002 வரை, அந்த அறை, ஏழு முறை திறக்கப் பட்டுள் ளது. நகைகளை படம் எடுத்து ஆவணப் படுத்தப் பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அதற்கான படங்களும்,அதற்கான, பிலிம்களும் இல்லை.விலை மதிப்பு மிக்க நகைகள் இருப்பதால், கோவிலில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். நகைகளை அனைவரும் பார்க்கும்படி, அருங் காட்சியகம் அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, தங்க குடங்களை திருடியவர் களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா திருவிழாவில் நாளை கொடியேற்றம், கம்பத்தில் தீச்சட்டி ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், 1.97 கோடி ரூபாய் செலவில், நிரந்தர வண்ண மின் விளக்கு களால் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசை சிறப்பு பூஜை ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே பெரியகோட்டை சிவகுருநாத சுவாமி கோயில் சிவராத்திரி திருவிழாவில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவ பெருமாள்‌ கோவிலில், மாசி அமாவாசையை முன்னிட்டு மூன்று நாள் தெப்ப ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar