பதிவு செய்த நாள்
17
ஆக
2016
12:08
திருவள்ளூர்: தர்மராஜா கோவில் உற்சவத்தில், அர்ஜுனன் - சுபத்திரை திருமணம் கோலாகலமாக நடந்தேறியது. திருவள்ளூர் அடுத்த, புல்லரம்பாக்கம் கிராமத்தில் தர்மராஜா சமேத திரவுபதி அம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இத்திருவிழாவின், நான்காவது நாள் உற்சவம், நேற்று முன்தினம் நடந்தது. இதில், அர்ஜுனன் - சுபத்திரை திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பின், தம்பதி சமேதராக, புல்லரம்பாக்கம் கிராம வீதிகளில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில், புல்லரம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.