ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மூன்றாம் பிரகாரத்தில் விவேகானந்த கேந்திரம் சார்பில் நேற்று உலக நன்மைக்காக 2007 விளக்கு பூஜை நடந்தது. முன்னதாக ராமகிருஷ்ணமடம் வளாகத்தில் மாதர் மாநாடு நடந்தது. தொடர்ந்து நான்குரத வீதியில் ஊர்வலமாக வந்த பெண்கள், ராமநாதசுவாமி கோயில் மூன்றாம் பிரகாரத்தில் விளக்கு பூஜை செய்து வழிபட்டனர். விவேகானந்த கேந்திர அகில பாரத பொதுச்செயலாளர் ரேகா துவக்கி வைத்தார். கேந்திர மூத்த நிர்வாகி ராமகிருஷ்ணன், கிராம திட்ட செயலாளர் ஐயப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.