பதிவு செய்த நாள்
26
செப்
2011
11:09
திருநெல்வேலி:நெல்லையப்பர் கோவிலில் நவராத்திரி விழா நாளை (27ம்தேதி) துவங்குகிறது.நெல்லை மாவட்டத்தில் அம்மன் கோவில்களில் நவராத்திரி, தசரா விழா ஆண்டுதோறும் கோலாகலமாக நடக்கும். நவராத்திரியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடு, சப்பரபவனி நடக்கும். இந்த ஆண்டு நவராத்திரி விழா நாளை துவங்குகிறது.நெல்லையப்பர் கோவிலில் நாளை நவராத்திரி விழா துவங்குகிறது. நாளை முதல் அக்டோபர் 11ம்தேதி முடிய சோமவார மண்டபத்தில் சுவாமி, அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, இரவு 8 மணிக்கு சோடச அலங்கார, தீபாராதனை நடக்கிறது. மகிஷாசுரமர்த்தினி, சங்கிலி மண்டபத்தில் அமைந்துள்ள மஞ்சனவடிவாம்பாளுக்கு ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரம், வழிபாடு நடக்கிறது. காந்திமதி அம்பாளுக்கு லட்சார்ச்சனை நடக்கிறது.அக்டோபர் 6ம்தேதி மாலை 6 மணிக்கு விஜயதசமி பரிவேட்டைக்கு வெள்ளிக்குதிரை வாகனத்தில் சந்திரசேகரர் வீதியுலா சென்று ராமையன்பட்டியில் அம்பு போடும் நிகழ்ச்சி நடக்கிறது.ஏற்பாடுகளை செயல் அலுவலர் (பொறுப்பு) கசன்காத்த பெருமாள், பக்தர்கள் குழுவினர் செய்திருந்தனர். கோவில்கள்விழாக்கோலம்நெல்லை, பாளை. பகுதி அம்மன் கோவில்களில் தசரா விழா நாளை துவங்குகிறது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்புபூஜைகள் நடக்கிறது. தசரா விழாவையொட்டி கோவில்கள் விழாக்கோலம் பூண்டுள்ளன.