பதிவு செய்த நாள்
18
ஆக
2016
12:08
அரூர்: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த இருளப்பட்டியில் அமைந்துள்ளது காணியம்மன் திருக்கோவில். இக்கோவிலின் தேர்த்திருவிழா பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் கடந்த, 9ம் தேதி துவங்கியது. தொடர்ந்து, 11ம் தேதி கொடியேற்றுதல் நிகழ்ச்சியும், 15ம் தேதி சுவாமி திருக்கல்யாணம், வாண வேடிக்கை, பல்லக்கு உற்சவம், மாவிளக்கு எடுத்தல், சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் விழா நேற்று நடந்தது. மதியம், 3 மணிக்கு, காணியம்மன் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். விழாவில் பங்கேற்ற பக்தர்கள், உப்பு, மிளகு, முத்துக்கொட்டை, நவதானியங்கள் உள்ளிட்டவைகளை, தேர் மீது இறைத்து, தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். தேர் திருவிழாவையொட்டி, புதுப்பட்டி மற்றும் பாப்பம்பாடியில், எருது விடுதல், முனி பிடிக்கும் திருவிழா, மஞ்சள் நீராட்டு விழா நடக்க உள்ளது.