Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! பெண்களின் சபரிமலையில் அஸ்வதி பொங்கல் விழா! பெண்களின் சபரிமலையில் அஸ்வதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொளஞ்சியப்பர் கோவிலில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஆக
2016
05:08

விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த, இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.  விருத்தாசலம், மணவாளநல்லுாரில் உள்ள கொளஞ்சியப்பர் கோவிலில் கிருத்திகை, சஷ்டி, பங்குனி உத்திர பெருவிழா விசேஷமாக நடைபெறும். விருத்தாசலத்தை சுற்றியுள்ள கிராம மக்கள், வெளி மாவட்டங்கள், மும்பை, பெங்களூர், கேரளா உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் ஏராளமானோர் இங்கு வந்து தரிசித்து செல்கின்றனர். இக்கோவிலில், தங்கள் கோரிக்கையை மனுவாக எழுதி, கோவில் நிர்வாகத்திற்கு கட்டணம் செலுத்தி, அர்ச்சனை செய்து, பிராது கட்டுவது வழக்கம்.

நோய் பாதித்தவர்களுக்கு வேப்ப எண்ணெய் மந்திரித்து தரப்படுகிறது. இங்கு, ஆண்டுக்கு ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் பேர் வரை பிராது கட்டுகின்றனர். பிரது கட்ட சீட்டுக்கு 20 ரூபாயும், கிலோ மீட்டருக்கு 25 பைசாவும்  வசூலிக்கப்படுகிறது. சாதாரண குடும்பத்தினர் முதல் எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர்கள், உயரதிகாரிகள் வரை பிராது கட்டிச் செல்கின்றனர். கோரிக்கை நிறைவேறியதும், மனுவை வாபஸ் பெறுவதுடன், கோவிலுக்கு தங்களால் முடிந்த காணிக்கையை   செலுத்துகின்றனர். ஓராண்டுக்கு முன் முதல்வர் ஜெ., கைது செய்யப்பட்டபோது, அவர் ஜாமீனில் விடுதலையாக வேண்டி, அமைச்சர் கோகுல இந்திரா பிராது கட்டினார். பின்னர் ஜெ., விடுதலையானதும் கோவிலுக்கு ஜெனரேட்டர் வசதி செய்து கொடுத்து, பிராது சீட்டை வாபஸ் பெற்றுச் சென்றார்.  

அதேபோல், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, முன்னாள் முதல்வர் ரங்கசாமி போன்ற பிரபலங்களும் சமீபத்தில் இங்கு வந்து வழிபட்டு சென்றனர். ஏராளமானோர் வந்து செல்லும் நிலையில், கோவிலில் போதிய கழிவறை, குடிநீர்,  மொட்டையடிக்கும் கூடம், குளிக்க, உடை மாற்றும் அறை உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாததால் பக்தர்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். அதேபோல், கோவில் வளாகத்தில் பராமரிக்கப்படும் மயில்கள், மான்கள் போதிய பராமரிப்பின்றி உள்ளதால் சமூக ஆர்வலர்கள்  கவலையடைகின்றனர். பக்தர்கள் பிராது சீட்டு கட்டுதல், நேர்த்தி கடனுக்காக செலுத்தப்படும் ஆடு, கோழிகள்; தானியங்களான முந்திரிகொட்டை, நெல், வேர்க்கடலை உள்ளிட்டவை உண்டியல் காணிக்கை என பல வழிகளில் வருவாய் வருகிறது.  அதே சமயத்தில் கோவில் வளாகம் முறையாகப் பராமரிப்பின்றியும், போதிய அடிப்படை வசதிகளின்றியும் உள்ளதால் பக்தர்கள் அவதியடைகின்றனர்.  எனவே, கோவில் வளாகத்தில் மண்டியுள்ள புதர்களை அகற்றி, பூங்காங்கள் அமைக்கவும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவும் இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில், ந.வைரவன்பட்டி வளரொளிநாதர் கோயில்களில் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தில் இன்று மோகினி ... மேலும்
 
temple news
திருப்பதி;  ஜனாதிபதி திரௌபதி முர்மு திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி இன்று தரிசனம் ... மேலும்
 
temple news
டில்லி; டில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
கோவை;  கார்த்திகை மாதம் அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே. எஸ். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar