கிருஷ்ணகிரியில் கிருஷ்ண ஜெயந்தி விழா: கோவில்களில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஆக 2016 01:08
கிருஷ்ணகிரி: தர்மபுரி, கிருஷ்ணகிரியில், கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி கோவில்களில் நடந்த சிறப்பு பூஜையில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. கிருஷ்ணகிரி பழையபேட்டையில் உள்ள லட்சுமி நாராயணசாமி கோவிலில் காலை சிறப்பு பூஜைகள் நடந்தன. பழையபேட்டை மலையப்ப சீனிவாச பெருமாள் கோவிலில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் கிருஷ்ணர் திருவீதி உலா வந்தார். தர்மராஜா கோவிலில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜையும், திருவீதி உலாவும் நடந்தது. பழையபேட்டை நரசிம்ம சாமி கோவில் தெருவில் உள்ள கிருஷ்ணர் கோவிலில், நாகர் மீது கிருஷ்ணர் அமர்ந்திருப்பதை போல் விசேஷ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
* தர்மபுரி அப்பாவு நகர், ஸ்ரீ மீனாட்சி நாராயணா திருமண மண்டபத்தில் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சார்பில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று நடந்தது.தர்மபுரி கோட்டை பரவாசுதேவ சுவாமி கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அபி?ஷக ஆராதனைகள் நடந்தன. மேலும், பக்தர்களின் பால் குட ஊர்வலம் நடந்தது. தர்மபுரி அடுத்த ஆட்டுக்காரன்பட்டியில் உள்ள ராதே கிருஷ்ணா பிருந்தாவனத்தில், ராதே கிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.