Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி உறியடி ... புலியூர் கிருஷணர் கோயிலில் கிருஷ்ண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் முருகன் கோயில் குடவருவாயில் தீபாரதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஆக
2016
12:08

தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆவணி திருவிழா ஐந்தாம் நாளான நேற்று சுவாமிக்கு குட வருவாயில் தீபாரதனை நடந்தது. முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் ஆவணி திருவிழா ஆக.,22 ல் கொடியேற்த்துடன் துவங்கியது. 12 நாட்கள் திருவிழா நடந்து வருகிறது. திருவிழா நாட்களில் சுவாமியும், அம்பாளும் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடக்கிறது. ஐந்தாம் திருவிழாவான நேற்று (ஆக., 26) வெள்ளி சப்பரத்தில் சுவாமியும் அம்பாளும் எழுந்தருளி வீதியுலா நடந்தது. பின் சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடந்தது. இரவு 7.30 மணிக்கு குட வருவாயில் தீபாரதனை நடந்தது. பின் சுவாமியும் அம்பாளும் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தனர். ஏழாம் நாளான ஆக., 28 ல் அதிகாலை 4.30 மணிக்கு சண்முகருக்கு உருகு சட்ட சேவை நிகழ்ச்சி நடக்கிறது. அன்று மாலை 4 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் வீதியுலா வருகிறார்.

ஆக., 29 ல் மாலை சுவாமி பச்சை சாத்தி கோலத்தில் தங்க சப்பரத்தில் வீதியுலா வருகிறார். ஆக., 31 ல் காலை 6.30 மணிக்கு சுவாமியும், அம்பாளும் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர். பின் ரத வீதிகள் வழியாக தேரோட்டம் நடக்கிறது. செப்., 2 ல் மஞ்சள் நீராட்டு கோலத்தில் சுவாமியும் அம்பாளும் வீதியுலா வருகின்றனர். அத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் கோட்டை மணிகண்டன், இணை கமிஷனர் வரதராஜன், மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வாலாஜாபாத்: நத்தாநல்லுார் ஸ்ரீதேவி எல்லையம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி தெப்போற்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் : பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமி மற்றும் பூஜ்யஸ்ரீ சத்ய ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரைத்திருவிழா கொண்டாட்டம் நாளை (ஏப்.,19) மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோவை: சித்திரை மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துர் சந்தன மாரியம்மன் கோயிலில் நேற்று நடந்த பூக்குழி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar