மேட்டுப்பாளையம்: காரமடையில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து ஊர்வலத்தில் பங்கேற்றனர். காரமடையில் விசுவ இந்து பரிஷத்தும், ராமானுஜர் விழாக்குழுவும் இணைந்து கிருஷ்ண ஜெயந்தி ஆறாம் ஆண்டு விழாவை கொண்டாடியது. பரிவேட்டை மைதானத்திலிருந்து குழந்தைகள் ஊர்வலம் புறப்பட்டது. விசுவ ஹிந்து பரிஷத் மாநில நிதிக்குழு ராமமூர்த்தி ஊர்வலத்தை துவக்கி வைத்தார். ஊர்வலம் தோலம்பாளையம் ரோடு, நான்கு ரத வீதி, கோவை மெயின் ரோடு வழியாக மீண்டும் பரிவேட்டை மைதானத்தை அடைந்தது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்தும், பெற்றோரும் பங்கேற்றனர். வேதவியாச சுதர்சன பட்டர் ஆசியுரை வழங்கினார். சுதேசி கல்வி பேரவை பேராசிரியர் கனகசபாபதி, விசுவ இந்து பரிஷத் மாநில அமைப்பாளர் சிவக்குமார் உள்பட பலர் பேசினர். விழா ஏற்பாடுகளை விசுவ ஹிந்து நிர்வாகிகள் கார்த்திக், நித்தியானந்தம், மயில்சாமி ஆகியோர் செய்திருந்தனர்.