நேர்த்திக்கடன் என்பது இருவகை. ஒன்று குடும்ப வழக்கப்படி பரம்பரையாகச் செய்வது. இரண்டாவது நாம் வேண்டுதலாகச் செய்வது. குடும்ப வழக்கில் உள்ளதை தள்ளிப் போடாமல் காலத்தில் செய்து விட வேண்டும். பிரச்னையான சூழலில் முடிந்தது, முடியாதது என்றெல்லாம் யோசிக்காமல் எதையாவது வேண்டிக் கொண்டு காரியமான பிறகு, அதைச் செய்ய வேண்டியதில்லை என பலரும் விட்டு விடுகிறார்கள். இது மட்டுமே தவறு. நம்மால் செய்யக் கூடியதை குறிப்பிட்ட காலத்தில் செய்வதாக வேண்டிக்கொள்வதே நல்லது.