Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரனூர் பக்தகோலாகலனுக்கு கோவிந்த ... பச்சை சாத்தி கோலத்தில் திருச்செந்தூர் சண்முகர் வீதியுலா! பச்சை சாத்தி கோலத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன்மலை உத்தரவு பெட்டியில் பூ மாலை வைத்து வழிபாடு!
எழுத்தின் அளவு:
சிவன்மலை உத்தரவு பெட்டியில் பூ மாலை வைத்து வழிபாடு!

பதிவு செய்த நாள்

29 ஆக
2016
05:08

காங்கேயம்: சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில், பூ மாலை வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. இதனால், திருமண கனவோடு காத்திருக்கும் காளையருக்கும், கன்னியருக்கும் விரைவில் திருமணம் கைக்கூடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்துள்ள சிவன்மலை புகழ்பெற்ற மலைக்கோவில். சிவவாக்கிய சித்தரால் பாடல் பெற்ற தலம். இங்கு நடக்க இருப்பதை, முன் கூட்டியே உணர்த்தும் விதமாக, 100 ஆண்டுக்களுக்கும் மேலாக ஆண்டவர் உத்தரவு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. சிவன்மலை ஆண்டவர், பக்தர்களின் கனவில் வந்து, தனக்கு இந்த பொருளை வைத்து பூஜை செய்யுமாறு கூறுவார். உத்தரவு பெற்ற பக்தர், கோவில் நிர்வாகத்தை அணுகி, தமது கனவில் உத்தரவான பொருளை கூறுவார். கோவில் நிர்வாகத்தினர் பூ வைத்து, சுவாமியிடம் உத்தரவு கேட்பர்.  உண்மையெனில் குறிப்பிட்ட பொருள் ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும்.

கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்படும் பொருளுக்கு, கால நிர்ணயம் என்று எதுவும் இல்லை. இன்னொரு பக்தரின் கனவில் வந்து, அடுத்த பொருளை சுட்டிக் காட்டும் வரை, பழைய பொருளே கண்ணாடி பெட்டிக்குள், பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். இங்கு வைக்கப்படும் பொருள், சமுதாயத்தில் முக்கியத்துவம் பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கடந்த மே, 6ம் தேதி முதல், துளசி செடி வைத்து பூஜை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில்,  திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், கொங்கூரை சேர்ந்த சிவராம் என்பவரின் கனவில் பூமாலை உத்தரவானது. இதையடுத்து, ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூமாலை வைத்து பூஜை செய்யப்படுகிறது.   திருமண கனவோடு காத்திருக்கும் காளையருக்கும், கன்னியருக்கும் விரைவில் திருமணம் கைக்கூடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.   

இது குறித்து, கோவில் சிவாச்சாரியார் ராஜசேகர் கூறியதாவது:   சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில், எந்த பொருள் வைத்து பூஜை செய்யப்படுகிறதோ அந்த பொருள் சமுதாயத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது பூமாலை வைத்து செய்யப்படுகிறது. இதனால் சுபகாரியங்கள் கைகூடும். மேலும் போக போக தான் சமுதாயத்தில் இதன் தாக்கம் தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருப்பதியில் நடைபெறும் புஷ்ப யாகத்திற்கான பிரமாண்டமான மலர் ஊர்வலம் இன்று காலை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மண்ணிப்பள்ளம் ஆதி வைத்தியநாத கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு முருகன் திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
லண்டன்; தீபாவளி மற்றும் இந்து புத்தாண்டு கொண்டாட்டங்களுடன் இணைந்து, லண்டனின் நீஸ்டனில் உள்ள பிஏபிஎஸ் ... மேலும்
 
temple news
ஹைதராபாத்; பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் நேற்று (அக்.29 ல்) மாலை ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அருகே, 1200 ஆண்டுகள் பழமையான பல்லவர்கால மூத்ததேவி கல் சிற்பம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar