புதுச்சேரி: கிருபானந்த வாரியார் நலசங்கத்தின் 9ம் ஆண்டு விழா மற்றும் கிருபானந்த வாரியாரின் 111வது பிறந்த நாள் விழா நடந்தது. கதிர்காமம் கதிர்வேல் சுவாமி திருமண மண்டபத்தில் நடந்த விழாவிற்கு, சுப்ரமணியன் வரவேற்றார். துணை சபாநாயகர் சிவக்கெழுந்து தலைமை தாங்கினார். துணைத் தலைவர் முருகேசன், செயற்குழு உறுப்பினர் ஜெகதீசன் முன்னிலை வகித்தனர். ஓய்வு பெற்ற நீதிபதி முருகபூபதி உபதேச மந்திரப் பொருள் என்ற தலைப்பிலும், பாகூர் பேராசிரியர் அன்னுசாமி மேல்நிலைப்பள்ளி முதல்வர் நீலம் அருட்செல்வி ஆறுமுகமான பொருள் என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினர். காரைக்குடி ராமசாமி தமிழ் கல்லுாரி முன்னாள் முதல்வர் முருகசாமி, தேசிய நல்லாசிரியர் வெற்றிவெல் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினார். தலைவர் சிங்காரவேலு தொகுப்புரையாற்றினார். துணைச் செயலாளர் கோபதி நன்றி கூறினார்.