ஊத்துக்கோட்டை’ஜலகண்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை வழிபட்டனர்.எல்லாபுரம் ஒன்றியம், நெல்வாய் கிராமத்தில் உள்ளது, புவனேஸ்வரி அம்பாள் சமேத ஜலகண்டேஸ்வரர் கோவில். பழமை வாய்ந்த இக்கோவில், பக்தர்கள் பங்களிப்புடன் சீரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம், கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், இரண்டு கால யாக பூஜைகள், பூர்ணாஹூதி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று, காலை 9:30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.