ராமேஸ்வரம், : காஞ்சி ஜெயேந்திரர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, ஆந்திரா விஜயவாடா மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். அவர் பூரண நலம் பெறவேண்டி, ராமேஸ்வரம் காஞ்சி மடத்தில் மிருத்துஞ்ஜெய பூஜை மற்றும் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடந்தது. இதில் புரோகிதர்கள் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை காஞ்சி மடம் மேலாளர் சுந்தரம் செய்திருந்தார்.