நினைத்தது நிறைவேறவும், குடும்ப பிரச்னை, நோய் நீங்கவும் திருப்பதி ஏழுமலையானுக்கு மாவிளக்கு ஏற்றுவதாக நேர்ந்து கொள்வர். இந்த நேர்த்திக்கடனைச் செலுத்த திருப்பதி செல்லத் தேவையில்லை. புரட்டாசி சனியன்று வீட்டிலேயே பெருமாள் படம் வைத்து மாவிளக்கு ஏற்றலாம். தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை பாக்கு நைவேத்யம் செய்து, வெங்கடேச ஸ்தோத்திரம், நாலாயிர திவ்ய பிரபந்தம் பாராயணம் ஆகியவற்றைப் படிக்க வேண்டும். இந்த வழிபாட்டின் போது, திருப்பதி பெருமாள் நம் வீட்டுக்கே நேரில் எழுந்தருள்வதாக ஐதீகம்.