யானைக்கு தந்தம் தான் அழகு. அது தன் தந்தத்தை அக்கறையோடு பாதுகாக்கும். ஆனால், விநாயகர் என்னும் யானை முகக்கடவுள் மட்டும் தனக்கு அழகும், கவுரவமும் தரும் தந்தத்தை தியாகம் செய்ய முன் வந்தார். வியாச மகரிஷி, மகாபாரத காவியம் படைத்தபோது, தன் ஒற்றைக் கொம்பை ஒடித்து, எழுத்தாணியாக்கி எழுதினார். இது ஆக்க சக்தி. கஜமுகாசுரனை தன் தந்தத்தால் குத்தி வதம் செய்தார். ஆக்க சக்தியும், அழிக்கும் சக்தியும் தனக்கே உரித்தானது என்பதை இதன்மூலம் தெளிவுபடுத்தினார். அன்பர்களுக்கு அன்பையும், வம்பர்களுக்கு தண்டனையையும் வழங்கும் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்.