விழுப்புரம் : விழுப்புரம் ராஜகணபதி கோவிலில் சுவாமி வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. விழுப்புரம் மாதகோவில் பஸ் நிலையம் அருகே உள்ள ராஜகணபதி கோவிலில், விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவையொட்டி, மூலவர் விநாயகருக்கு, சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து, விநாயகர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில், வீதியுலா நடந்தது.