ஸ்ரீசீனுவாச பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09செப் 2016 11:09
வானுார் : வானுார் அடுத்த கொஞ்சிமங்கலம் கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி ஸ்ரீசீனுவாச பெருமாள் கோவிலில், 8ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை, சீனுவாசப் பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. இரவு 9:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது. விழாவில், கலந்து கொண்ட பக்தர்களுக்கு திருமங்கை ஆழ்வார் பஜனைக் குழு மற்றும் கிராம மக்கள் சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது.