பழநி: பழநி சாய்சதன் ஷீரடி சாய்பாபா கோயிலில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு யாகபூஜைகள் நடந்தது. விழாவை முன்னிட்டு பழநி திருவள்ளுவர் சாலை சாய்சதன் ஷீரடி சாய்பாபா கோயிலில் கடந்த சில தினங்களாக சிறப்பு பக்திசொற்பொழிவுகள், கூட்டுபிரார்த்தனைகள் நடந்தது. நேற்று காலை சிறப்பு யாகபூஜை, ஷீரடி சாய்பாபாவிற்கு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.