சிங்கம்புணரி, சிங்கம்புணரியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி அனைத்து இந்து அமைப்பு சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. டாக்டர் அருள்மணி நாகராஜன் தலைமை வகித்தார். தொழிலதிபர் சத்தியசீலன், ஜோதி, செல்வம் முன்னிலை வகித்தனர். திரைப்பட இயக்குநர் கஸ்துாரிராஜா சிறப்புரையாற்றினார். டாக்டர் கருப்பையா ஊர்வலத்தை துவக்கி வைத்தார். 26க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் எடுத்துவரப்பட்டன. சீரணி அரங்கம் அருகிலிருந்து புறப்பட்ட ஊர்வலம் சேவுகப்பெருமாள் கோவில் வந்தடைந்தது. தெப்பக்குளத்தில் அனைத்து சிலைகளும் கரைக்கப்பட்டன.ஆர்.எஸ்.எஸ். ஒன்றியத்தலைவர் குகன், மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.