ராஜபாளையம்: ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நகரைச்சுற்றி பூஜைக்கு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலம் நடந்து. நேற்று ராஜபாளையம் நகர் பகுதி, தொட்டியப்பட்டி, அழகாபுரி, தளவாய்புரம், அய்யனாபுரம், சத்திரப்பட்டி மற்றும் ராஜபாளையம் ஒன்றியப் பகுதிகளில் இருந்து 34 சிலைகள் பூஜிக்கப்பட்டு வழிபாட்டுடன் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. ஊர்வலத்திற்கு பன்னிரண்டு திருமுறை மன்றத்தலைவர் கருப்பையா தலைமை வகித்தார். மாவட்ட இந்து முன்னணி மாவட்ட தலைவர் சிவசாமி, நகர தலைவர் கருப்பசாமி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். ஊர்வலம் பஞ்சு மார்க்கெட் நேரு சிலையில் ஆரம்பித்து தெற்கு போலீஸ் ஸ்டேஷன், அம்பலபுளி பஜார், குருசாமி கோயில், சங்கரன் கோயில் முக்கு பகுதி வழியாக புதுபஸ்ஸ்டாண்ட் எதிரே கருங்குளம் கண்மாயில் கரைத்தனர். சங்கரேஸ்வரன் டி.எஸ்.பி., தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.