பதிவு செய்த நாள்
29
செப்
2011 
11:09
 
 நாசரேத் : நாசரேத் அருகே தைலாபுரம் பரிசுத்த உபகார அன்னை ஆலய திருவிழாவில் தேர்பவனி நடந்தது. நாசரேத் அருகே உள்ள தைலாபுரம் பரிசுத்த உபகார அன்னை ஆலய திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் நடந்தது. 1ம் திருவிழாவன்று மாலை கொடியேற்றம், மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடந்தது. பிரகாசபுரம் பங்குத்தந்தை சூசை ராஜா தலைமை வகித்து கொடியேற்றினார். தைலாபுரம் பங்குத்தந்தை அமலன் முன்னிலை வகித்தார். ஏரல் ஒத்தாசை மாதா ஆலய பங்குத்தந்தை பீட்டர் மறையுரை வழங்கினார். திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை ஜெபமாலை திருப்பலியும், மாலை ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீரும் நடந்தது. 10ம் திருவிழாவான நேற்று காலை திருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடந்தது. இலங்கநாதபுரம் பங்குத்தந்தை இருதயராஜ் தலைமை வகித்தார். காலை 10 மணிக்கு அன்னையின் திருவுருவ பவனியும், மாலை நற்கருணை பவனியும் நடந்தது. சாத்தான்குளம் மறை வட்ட முதன்மை குரு எட்வர்ட் தலைமை வகித்தார். கள்ளிகுளம் பங்குத்தந்தை அந்தோணிதாஸ் மறையுரை வழங்கினார். ஏற்பாடுகளை தைலாபுரம் பங்குத்தந்தை அமலன் தலைமையில் தலைவர் வில்லியம், செயலாளர் பொன்ராஜ், பொருளாளர் செல்வர், விழாக்குழுவினர் ஜோசப், ஜெயபால், மரியசெல்வராஜ், சுதாகர், கோபிசன் மற்றும் கிறிஸ்தவ மக்கள் செய்திருந்தனர்.