பதிவு செய்த நாள்
14
செப்
2016
12:09
கோத்தகிரி: கோத்தகிரி துாய ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. கோத்தகிரி துாய ஆரோக்கிய அன்னை திருவிழா, 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, ஒவ்வொரு நாளும், மாலை, 5:30 மணிக்கு, அன்பியங்கள் பங்கேற்ற சிறப்பு திருப்பலி இடம் பெற்றது. முக்கிய திருவிழா நாளான நேற்று முன்தினம், காலை 6:30, மற்றும், 7:40 மணிக்கு ஆயர் அமல்ராஜ் தலைமையில், வழிப்பாட்டுக் குழுவினர் மற்றும் அன்பியப் பொறுப்பாளர்கள் பங்கேற்ற கூட்டுத்திருப்பலி நடந்தது. மாலை, 4:30 மணிக்கு ஜெபமாலை திருப்பலியும், மாலை, 6:15 மணிக்கு, அன்னையின் ஆடம்பர தேர்பவனி நடந்தது. வண்ண விளக்குகள் ஜொலிக்க, கோவிலில் இருந்து புறப்பட்ட அன்னையின் தேர்பவனி, நகர சாலைகளில் சென்றது. தொடர்ந்து, திவ்விய நற்கருணை ஆசீர் நிகழ்ச்சி நடந்தது. விழாவில், கோத்தகிரி உட்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, மக்கள் திரளாக பங்கேற்றனர்.