புதுச்சேரி: லாஸ்பேட்டை அசோக் நகர் தலையாரி வேலாயுத அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நாளை 16ம் தேதி நடக்கிறது. லாஸ்பேட்டை அசோக் நகர் வாஞ்சிநாதன் வீதியில் உள்ள பூரணி பொற்கிலை தலையாரி வேலாயுத அய்யனார் கோவில் மற்றும் பரிவாரங்களின் கும்பாபிஷேக விழா நேற்று கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து முதல் கால பூஜைகள், வாஸ்து சாந்தி நடந்தது.இரண்டாம் நாளான இன்று இரண்டாம் கால பூஜைகள் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா நாளை 16ம் தேதி காலை 9 மணிக்கு மூன்றாம் கால பூஜைகளுடன் நடக்கிறது. மாலை 5 மணிக்கு தத்வார்ச்சனை நடக்கிறது. இரவு 8 மணிக்கு விமானத்திற்கு கும்பாபிஷேகம், கருவறையில் உள்ள தலையாரி வேலாயுத அய்யனாருக்கு மகா கும்பாபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.