ராமநாதபுரம், ராமநாதபுரம் அருகே குயவன்குடி சண்முக சடாச்சர சக்திவேல் எனப்படும் சாது சுப்பையா சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. செப்., 12 காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமம், மாலை 5:00 மணிக்கு முதல் யாக கால பூஜையுடன் துவங்கியது. செப்., 13 காலை 7:00 மணிக்கு 2ம் யாக கால பூஜை, மாலை 7:00 மணிக்கு 3ம் யாக கால பூஜை நடந்தது. நேற்று காலை 6:30 மணிக்கு 4ம் கால யாக பூஜைக்கு பின் 9:00 மணிக்கு கடங்கள் புறப்பாடாகின. 9:30 மணிக்கு கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து மகா தீபாராதனை நடந்தது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், குயவன்குடி கிராம மக்கள் செய்தனர்.