பழவேற்காடு: பழவேற்காடு அருகிலுள்ள, சாட்டன்குப்பம் மீனவ கிராமத்தில், ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவிலில், நேற்று மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. நேற்று காலை, 4:00 மணிக்கு, கோ பூஜை, நான்காம் கால நித்திய ஆராதனை நடந்தன. அதை தொடர்ந்து, காலை, 7:00 மணிக்கு, மூலவர் சன்னிதி உள்ள கோபுரத்தின் மீது புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. சாட்டன்குப்பம், பசியாவரம், இடமணி உள்ளிட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்தவர்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு, பெருமானை வழிபட்டு சென்றனர்.