திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த வேளாகுளம் கிராமத்தில் கோவில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது. வேளாகுளம் கிராமத்தில் பழமையான பாலாம்பிகை சமேத பாலசுந்தரேஸ்வரர் கோவில், புதுப்பிக்கப்பட்டு நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று அதிகாலை 4:30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து விசேஷ திரவிய ேஹாமம்‚ மூலமந்திர பூஜை‚ நாடிசந்தானம்‚ தத்துவார்ச்சனை‚ மகா பூர்ணாஹூதி நடந்தது. கடம் புறப்பாடாகி கோவிலை வலம்வந்து, பஞ்ச மூர்த்தி விமான கலசம் மற்றும் மூலவர்‚ மூர்த்திகளுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிேஷகம் நடந்தது. விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் குலதெய்வ பக்தர்கள் செய்திருந்தனர்.