திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு மாதம்தோறும் பவுர்ணமி அன்று லட்சக்கணக்கான பக்தர்கள், கிரிவலம் வருகின்றனர். நாளை, 16ம் தேதி அதிகாலை, 1:58 மணி முதல், 17ம் தேதி அதிகாலை, 12:58 மணி வரை பவுர்ணமி என்பதால், 16ம் தேதி இரவு கிரிவலம் வர உகந்த நேரம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.