கிள்ளை: கிள்ளை எம்.ஜி.ஆர். நகர் முனீஸ்வரசுவாமி கோவில் கும்பாபிஷேகம் நாளை (16ம் தேதி) நடக்கிறது. கிள்ளை எம்.ஜி.ஆர். நகர் முனீஸ்வரசுவாமி கோவிலில் ஆண்டு தோறும் ஆவணி மாதத்தில் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. தற்போது எட்டாம் ஆண்டு விழாவும் புதிய தாக கட்டப்பட்ட மண்டபம் மற்றும் முனீஸ்வரசுவாமி கோவில் கும்பாபிஷேகம் நாளை (16ம் தேதி) காலையில் நடக்கிறது. மாலை கிள்ளை காளிய ம்மன் கோவில் குளக்கரையில் இருந்து கரகம் புறப்பட்டு கோவிலை சென்றடைகிறது. அதன் பின் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை செய்து அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை மாஜி மீனவர் நல வாரிய உறுப்பினர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட விழா குழுவினர்கள் செய்து வருகின்றனர்.