பதிவு செய்த நாள்
15
செப்
2016
12:09
ஆத்தூர்: ஆத்தூர் சிவன் கோவில்களில், பிரதோஷ பூஜை நேற்று நடந்தது. ஆத்தூர், கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவிலில், நேற்று, பிரதோஷ பூஜையொட்டி, மூலவர் காயநிர்மலேஸ்வரர் மற்றும் நந்திக்கு, பால், தயிர், மஞ்சள், நெய், சந்தன அபி?ஷக பூஜை நடந்தது. மாலை, 5:00 மணியளவில், காயநிர்மலேஸ்வரர், நந்தி பகவான், சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதில், ஆத்தூர், நரசிங்கபுரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த, ஏராளமான பக்தர்கள், வழிபாடு செய்தனர். அதேபோல், ஆத்தூர் கைலாசநாதர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், ஆறகளூர் காமநாதீஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோவில்களில், பிரதோஷ பூஜை நடந்தது.