திருவாடானை, தொண்டி அருகே எம்.வி.பட்டினம் காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பூக்குழி இறங்கியும், பால், பறவை, வேல் காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் நிறைவுசெய்தனர். முன்னதாக அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு கலைநிகழ்ச்சிகள் நடந்தது.