உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் பாஞ்சராத்த தீபம் ஏற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06டிச 2025 11:12
உடுமலை: உடுமலை திருப்பதி கோவிலில், பாஞ்சராத்த தீபம் ஏற்றுதல் நிகழ்ச்சி நடந்தது.
உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில், கார்த்திகை பாஞ்சராத்த தீபத்தை முன்னிட்டு, நம்பெருமாள் மற்றும் தாயார்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து மாலை, 6:00 மணிக்கு, கார்த்திகை மாத கோவில் முன், பக்தர்களின் ‘கோவிந்தா’ கோஷம் முழங்க, பாஞ்சராத்த தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து உற்சவம் திருவீதி உலா மற்றும் சொக்கப்பனை கொளுத்தப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.