சின்னாளபட்டி, சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் பிரதோஷ விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. சுவாமி, நந்திக்கு பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது.* கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், 30 வகை திரவிய அபிஷேகம் நடந்தது. மூலவருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. உற்சவர் உள்பிரகார வலம், தேவார, திருவாசக பாராயணம், அன்னதானம் நடந்தது.* கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், வெல்லம்பட்டி மாரிமுத்துசுவாமி கோயில், பித்தளைப்பட்டி அண்ணாமலையார் கோயிலில் பிரதோஷ அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.