முட்டுக்காடு வேம்படி விநாயகர் கோவில் வேம்படி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16செப் 2016 12:09
முட்டுக்காடு: முட்டுக்காடு, இ.சி.ஆர்., சாலையில் உள்ள வேம்படி விநாயகர் மற்றும் அம்மன் கோவில்களின் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
திருப்போரூர் ஒன்றியம், முட்டுக்காடு கிழக்கு கடற்கரை சாலையில் பழமை வாய்ந்த வேம்படி விநாயகர் மற்றும் வேம்படி அம்மன் கோவில்கள் அமைந்துள்ளன. இக்கோவில்களில் கடந்த ஓராண்டாக நடைபெற்று வந்த திருப்பணிகள் முடிவுற்ற நிலையில் மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. கடந்த, 12ம் தேதி விநாயகர் பூஜையுடன் ஆரம்பமான கும்பாபிஷேக விழா, நான்கு கால யாக சாலை பூஜைகள் நடத்தப்பட்டு, நேற்று முன்தினம் காலை, 9.30 மணிக்கு யாக சாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட கலச குடங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, கோபுரங்களின் கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில், ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.