பதிவு செய்த நாள்
16
செப்
2016
12:09
பெ.நா.பாளையம்: கோவை அருகே உள்ள அத்திப்பாளையத்தில் உள்ள பூதேவி, ஸ்ரீதேவி சமேத பெருமாள் கோவில் புதியதாக புனரமைக்கப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் புதியதாக ஆண்டாள், ஆஞ்சநேயர், ராமானுஜர், ஆதிமூலவர் ஆகியோருக்கு தனித்தனியாக சன்னதிகள் கட்டப்பட்டுள்ளன. இதையொட்டி, திவ்யபிரபந்தம், உபச்சார சாற்றுமுறை உள்ளிட்டவை நடந்தன. தொடர்ந்து, பெருமாள், தாயார், துவாரபாலகர்கள், கருடாழ்வார், ஆஞ்சநேயர், நம்மாழ்வார், ராமாநுஜர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. பட்டாச்சாயர்கள் புனிதநீரை கோபுர கலசத்தின் மீது ஊற்றி, கும்பாபிஷேகம் நடத்தினர்.