பதிவு செய்த நாள்
16
செப்
2016
12:09
பரங்கிப்பேட்டை: புவனகிரி சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று நடந்த கும்பாபிஷேகத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
புவனகிரி சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. அதையொட்டி கடந்த 8ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, தீபாராதனையும், 9ம் தேதி முருகனுக்கு சத்ரு சம்ஹார த்ருசதி ஹோமமும், 10ம் தேதி கிராம சாந்தி, தீபாராதனையும், 11ம் தேதி யந்திர பூஜை, தீபாரதனையும் நடந்தது. 12ம் தேதி முதல் கால யாகசாலை பூஜையும், 13ம் தேதி இரண்டாம் கால யாகசாலை பூஜையும், 14ம் தேதி நான்கு மற்றும் ஐந்தாம் கால யாகசாலை பூஜையும் நடந்தது. கும்பாபிஷேக தினமான நேற்று ஆறாம் கால யாகசாலை பூஜை, மஹாபூர்ணாஹூதி, கடம் புறப்பாடாகி காலை 7:53 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை நாட்டாமை சிவகுமார் செய்திருந்தார்.