புதுச்சேரி: முருங்கப்பாக்கம் சமரச சன்மார்க்க ராமானுஜ பஜனை மட கோவிலில் 12ம் ஆண்டு புரட்டாசி திருவிழா நாளை 17ம் தேதி நடக்கிறது.
முருங்கப்பாக்கம் சமரச சன்மார்க்க ராமானுஜ பஜனை மட கோவிலில் புரட்டாசி திருவிழாவை முன்னிட்டு, நாளை ௧௭ம் தேதி புரட்டாசி முதல் சனிக்கிழமை அன்று திருமாளுக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. அன்று காலை 7 மணிக்கு திருமஞ்சனம், மகா தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி கருட சேவையில் எழுந்தருளுகி றார். மாலை 7 மணிக்கு சர்வ அலங்காரத்துடன் சுவாமி வீதி உலா நடக்கிறது.