திருநெல்வேலி: நெல்லை, குறுக்குத்துறை முருகன் கோயில் தேரோட்டம், நேற்று காலை நடந்தது. திருநெல்வேலியில், தாமிரபரணி ஆற்றின் நடுவே உள்ள குகைக்கோயில் குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோயில். திருவாவடுதுறை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில், திருச்செந்துார் கோயில் போன்று பழமையானது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை மற்றும் ஆவணி மாதங்களில் தேரோட்டம் நடத்தப்படும். ஆவணித் திருவிழா கடந்த, 6ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை நடந்த தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று தீர்த்தவாரியுடன் விழா நிறைவடைகிறது.