பதிவு செய்த நாள்
21
செப்
2016
12:09
தஞ்சாவூர்: திருப்பனந்தாள் காசிமடம் இணை அதிபரின் உடல், சிறப்பு வழிபாடுகளுடன் அடக்கம் செய்யப்பட்டது. தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அடுத்த, திருப்பனந்தாள் காசி மடத்தின் இணை அதிபர், ஸ்ரீமத் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள், 64. நேற்று முன்தினம் இரவு, மடத்தில் உணவு சாப்பிடும் போது, மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவரது உடலுக்கு நேற்று, பல்வேறு ஆதீனங்கள் மற்றும் மடாதிபதிகள், மயிலாடுதுறை எம்.பி., பாரதிமோகன், திருவிடைமருதுார் எம்.எல்.ஏ., செழியன், அறநிலையத் துறை அதிகாரிகள், பொதுமக்கள் என, ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். பின், அவரது உடல் பல்லக்கில், குருமூர்த்தம் வரை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, சிறப்பு வழிபாடுகளுடன், அடக்கம் செய்யப்பட்டது.