புதுச்சேரி : இடையார்பாளையம் சொர்ண பைரவர் கோவிலில் இன்று தேய்பிறை மத்ய சுக்ராஷ்டமி ஹோம பூஜை நடக்கிறது. தவளக்குப்பம் அடுத்த இடையார்பாளையம் நாணமேடு சப்தகிரி நகரில் உள்ள சொர்ண பைரவர் கோவிலில், இன்று (23ம் தேதி) தேதி மாலை 3:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை, தேய்பிறை அஷ்டமி, சுக்ராஷ்டமி, மத்யாஷ்டமி சிறப்பு ஹோமம் நடக்கிறது. தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, கலச பூஜை, பைரவ மகா மந்திர ஜெபம், சொர்ண ஆகர்ஷண பைரவர் ஹோமம், அஷ்ட லட்சுமி ஹோமம், மகா பைரவர் அபிஷேகம், ஆராதனை, அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை முத்து குருக்கள் செய்துவருகிறார்.