பதிவு செய்த நாள்
24
செப்
2016
12:09
திருவண்ணாமலை: முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பெற வேண்டி, அ.தி.மு.க., வினர் மாவட்டம் முழுவதும் பல்வேறு கோவில்களில் சிறப்பு அர்ச்சனை மற்றும் யாகம் நடத்தினர். திருவண்ணாமலையில், அருணாசலேஸ்வரர் கோவிலில் நகர, அ.தி.மு.க., சார்பிலும், பையூர் கிராமத்தில் மாரியம்மன் கோவிலில், அ.தி.மு.க., வினர் சார்பில் சிறப்பு யாகம், தேவிகாபுரம் கனககிரீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதே போன்று, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில், அ.தி.மு.க., வினர் சிறப்பு பூஜை நடத்தினர்.
திண்டிவனம்: முதல்வர் ஜெ.,விரைவில் குணமடைய வேண்டி, திண்டிவனத்தில் அ.தி.மு.க.,வினர் சிறப்பு பூஜை செய்தனர். திண்டிவனம் காவேரிப்பாக்கம் அம்மச்சார் கோவிலில், நகர அ.தி.மு.க., செயலாளர் தீனதயாளன் தலைமையில், சிறப்பு வழிபாடு நடந்தது. இதேபோல், ஓமந்துார் ஸ்ரீராம் பள்ளியில், மாவட்ட ஜெ.,பேரவை செயலாளர் முரளிரகுராமன் தலைமையில், முதல்வர் ஜெ., உடல்நலனுக்காக, கோ- பூஜை நடந்தது. ஒலக்கூர் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் ராஜேந்திரன் தலைமையில், சாரத்திலுள்ள ஈஸ்வரன் கோவிலில், சிறப்பு பூஜை நடந்தது.