விழுப்புரம்: முதல்வர் ஜெ.,உடல் நலம் வேண்டி, விழுப்புரம் சிவன் கோவி லில் சிறப்பு வழிபாடு நடந்தது. விழுப்புரம் மாவட்ட மகளிர் தையல் கூட்டுறவு சங்க இயக்குனர் ரமணிசந்திரன் தலைமையில், துர்க்கை அம்மனுக்கு ௧௦௧ விளக்குகள் ஏற்றி, சிறப்பு பூஜை நடந்தது. இதில் இயக்குநர்கள் வனிதா, மஞ்சுளா, சுகந்தி, ஈஸ்வரி, கனகவள்ளி, சாந்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.